இர்பான்கான், ரிஷி கபூர் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் - ஏ.ஆர்.ரகுமான்


இர்பான்கான், ரிஷி கபூர் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் - ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 5 May 2020 3:26 PM IST (Updated: 5 May 2020 3:26 PM IST)
t-max-icont-min-icon

இர்பான்கான், ரிஷி கபூர் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

சென்னை,

உடல்நலக் குறைவு காரணமாக பாலிவுட் நடிகர்கள் இர்பான் கானும், ரிஷி கபூரும் ஏப்ரல் 29, 30 தேதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இது ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இவர்களின் பாலிவுட் நண்பர்கள் பலரால் கூட இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இதுபற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-

அவர்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Next Story