சினிமா செய்திகள்

கணவரை விவாகரத்து செய்த நடிகை மேக்னா மறுமணம்? + "||" + Actress Magna remarried?

கணவரை விவாகரத்து செய்த நடிகை மேக்னா மறுமணம்?

கணவரை விவாகரத்து செய்த நடிகை மேக்னா மறுமணம்?
கணவரை விவாகரத்து செய்த நடிகை மேக்னா மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,

தமிழில் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த மேக்னா வின்சென்ட், தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமானார்.

மலையாள நடிகையான இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவர் டான் டோமியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. டான் டோமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மணமகளையும் முடிவு செய்து விட்டாராம்.

இந்த நிலையில் மேக்னாவும் மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. தொலைக் காட்சி தொடரில் தன்னுடன் நடித்த ஒரு நடிகருடன் மேக்னாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த நடிகரும் மனைவியை விவாகரத்து செய்தவர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் மறுமணம் குறித்து மேக்னா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.