சினிமா செய்திகள்

‘ஜிம்’ செலவு தேவையில்லை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் நடிகை குஷ்பு + "||" + Actress Khushboo can exercise at home

‘ஜிம்’ செலவு தேவையில்லை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் நடிகை குஷ்பு

‘ஜிம்’ செலவு தேவையில்லை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் நடிகை குஷ்பு
‘ஜிம்’ செலவு தேவையில்லை வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் குஷ்பு, சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார். வீட்டில் சமையல் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். 14 வயதில் எனது தோற்றம் என்று அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் ஊரடங்கு ஓய்வை எப்படி கழிப்பது? என்று டுவிட்டரில் குஷ்பு சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். அதில் “நல்ல உடற்பயிற்சியை விட சிறந்தது எதுவும் இல்லை. அதற்காக அதிக செலவு செய்து ‘ஜிம்’முக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். நாட்களை நேர்மறையாக தொடங்க இது சிறந்த வழி. தாமதம் ஆகிவிடவில்லை. அதற்கு நான் கியாரண்டி” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதில் ஒரு வார்த்தை விடுபட்டதால் அர்த்தம் மாறியது. இதனை ரசிகர்கள் சுட்டி காட்டியதும் உடனே மன்னிப்பு கேட்டார். “சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருப்பவர்கள் வார்த்தைகளை டைப் செய்யும்போது கையை விட மூளை வேகமாக டைப் செய்வதால் சில வார்த்தைகள் விடுபடுவது உண்டு. எனக்கும் அப்படித்தான்” என்று கூறியுள்ளார்.