பிரேமம் பட நடிகருக்கு குழந்தை பிறந்தது ரசிகர்கள் வாழ்த்து
பிரேமம் பட நடிகருக்கு குழந்தை பிறந்ததை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன், உள்ளிட்ட பலர் நடித்த மலையாளத் திரைப்படம், பிரேமம்’ தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட படம் எனலாம். இத்திரைப்படம் எப்படி மொழி கடந்து அதிகளவு ரசிகர்களுக்குப் பிடித்துப் போய்விட்டது என்பது ஒரு உளவியல் சார்ந்த விஷயம்.
சேரன் நடித்த ஆட்டோகிராப், பிரேமம் போன்ற படங்கள் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுப் உரசிப் பார்க்க வல்லது, பால்யத்தை, பதின் வயதைத் திரும்பிப் பார்கச் செய்வது, பழைய விஷயங்களை அசை போடும் போது கிடைக்கும் நினைவுகளின் திரட்சியை அணுகிப் பார்ப்பது, இளமையெனும் பருவத்தையும், மறக்க முடியாத வாழ்பானுபவங்களையும் கிளர்ந்தெழச் செய்வது. பொக்கிஷமாக பொத்தி வைத்திருந்த நெஞ்சை தொட்ட காதல் அனுபவங்கள், உயிர் வரை ஊடுருவிச் சென்ற நேசங்கள் என வாழ்க்கையை காதல் மட்டுமே அழகாக்குகிறது.
இந்தநிலையில், இந்த படத்தில் ஹீரோவுடன் ஷராஃப் யு தீன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே நேரம், ஓம் ஷாந்தி ஓஷானா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story