சினிமா செய்திகள்

கதாநாயகியாக உயர்ந்தார் விவாகரத்துக்கு முன்பும், பின்பும் ரம்யா! + "||" + Ramya rises as heroine before and after divorce

கதாநாயகியாக உயர்ந்தார் விவாகரத்துக்கு முன்பும், பின்பும் ரம்யா!

கதாநாயகியாக உயர்ந்தார் விவாகரத்துக்கு முன்பும், பின்பும் ரம்யா!
கடந்த 2014-ம் ஆண்டில், அப்ராஜித் என்ற இளைஞரை திருமணம் செய்தார்.
சென்னை,

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர், ரம்யா. சில ‘சின்னத்திரை’ நிகழ்ச்சிகள் இவருக்கு புகழ் சேர்த்தன. அதைத்தொடர்ந்து, ‘ஓகே கண்மணி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘வனமகன்’ ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில், அப்ராஜித் என்ற இளைஞரை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். விவாகரத்துக்குப்பின், ரம்யா மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதிலும், டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் கவனம் செலுத்தினார். அதன் விளைவாக அவருக்கு கதாநாயகியாக நடிக்க சில பட வாய்ப்புகள் வந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் இவர் தனது புகைப்படங்களை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவர் நயன்தாரா, யோகி பாபு ஆகிய இருவருடன் நடித்த காட்சிகளை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.