சினிமா செய்திகள்

இன்னொரு நடிகை மீ டூ புகார் + "||" + Another actress complains to Me

இன்னொரு நடிகை மீ டூ புகார்

இன்னொரு நடிகை மீ டூ புகார்
தமிழில் ஷாம் நடித்த ‘அகம் புறம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
சென்னை,

பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகாரில் இந்தி பட உலகம் அதிர்ந்தது. ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்களையும், இயக்குனர்களையும் சந்திக்கு இழுத்தார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் மீ டூவில் சிக்கினர்.

தற்போது நடிகை காஷ்மிரா ஷாவும், மீ டூ அனுபவங்களை தெரிவித்துள்ளார். இவர் தமிழில் ஷாம் நடித்த ‘அகம் புறம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். எஸ் பாஸ், சிட்டி ஆப் கோல்ட், ஜங்கிள், சாஸிஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். அவர் கூறியதாவது:-

“பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால் நான் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டேன். எனது குழந்தைகள் வளர்ந்து அம்மா நல்லவர் என்று பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எனது திறமையை நம்பி வாய்ப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றி”.

இவ்வாறு அவர் கூறினார்.