சினிமா செய்திகள்

நீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா + "||" + Andrea Jeremiah Thank you chennaipolice

நீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா

நீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், அருகிலிருக்கும் மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை  தமிழக அரசு துரிதப்படுத்தி வருகிறது.

இந்த கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது பணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவை எதிர்த்து போராடும் நீங்கள் உண்மையான ஹீரோக்கள். காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி என அதில் கூறியுள்ளார்.