ஆஸ்கார் விருது விழா கொரோனாவால் தள்ளிவைப்பு?
93 வருட வரலாற்றில் முதல் தடவையாக ஆஸ்கார் விருது விழா கொரோனாவால் தள்ளிவைக்க்ச் போவதாக கூறப்படுகிறது.
நியூயார்க்,
கொரோனா உயிர்ப்பலிகளால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முன்பு தியேட்டர்களில் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் பல ஹாலிவுட் படங்களின் ரிலீசை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனாலேயே விருது வழங்கும் விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது விழா தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
Related Tags :
Next Story