பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு;ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படுமா? நடிகை குஷ்பு கேள்வி


பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு;ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படுமா? நடிகை குஷ்பு கேள்வி
x
தினத்தந்தி 14 May 2020 5:34 AM GMT (Updated: 14 May 2020 5:34 AM GMT)

பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு;ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படுமா? நடிகை குஷ்பு கேள்வி

சென்னை, 

பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், பொதுமக்கள் ஒத்துழைப்பையும் விவரித்தார். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அந்த ஊரடங்கு வித்தியாசமானதாக இருக்கும் என்றும் கூறினார். இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களையும் அறிவித்தார்.

பிரதமர் பேச்சை நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சமூக வலைத்தளத்தில் விமர்சித்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:-

“2014-ல் வாக்குறுதி அளித்தபடி இந்த இக்கட்டான நேரத்தில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை எப்படி டெபாசிட் செய்வீர்கள் நரேந்திர மோடி அவர்களே. அதை செய்தால் தற்போதைய நெருக்கடிக்கு பெரிய உதவியாக இருக் காதா? சொல்லுங்க சாமி அந்த 15 லட்சத்தை கொஞ்சம் எல்லா அக்கவுண்டிலும் போட்டீர்கள் என்றால் நல்லா இருக்குமில்ல. சொல்லுங்க, 20 லட்சம் கோடி பணத்துக்காக வங்கிகளை ஏமாற்றியவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் கோடியை எப்படி திரும்ப பெறுவீர்கள். என் சமையலையாவது நேரத்தில் முடித்து இருப்பேன் நேரம் வீணாக போய் விட்டது”.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story