சினிமா செய்திகள்

25 நாளில் 10 லட்சம் பாலோயர்கள் தாண்டிய சல்மான்கான் தொடங்கிய யு-டியூப் சேனல் + "||" + Salman Khan 1.07M subscribers

25 நாளில் 10 லட்சம் பாலோயர்கள் தாண்டிய சல்மான்கான் தொடங்கிய யு-டியூப் சேனல்

25 நாளில் 10 லட்சம் பாலோயர்கள் தாண்டிய சல்மான்கான் தொடங்கிய யு-டியூப் சேனல்
இந்தி நடிகர் சல்மான் கான் யு-டியூப் சேனல் தொடங்கி 25 நாளில் 10 லட்சம் பாலோயர்களை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை,

குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவான வருமானத்தை பெற யூ- டியுப் சிறந்த தளமாக உள்ளது. அதனால் அதில் கணக்கை தொடங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்பவர்கள் பெருகி வருகின்றனர். கூகுளில் கணக்கு வைத்திருப்பவர்கள் யாரு வேண்டுமானாலும் யூ- டியுபில் கணக்கு தொடங்கலாம்.  தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுவதால் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்குவார்கள்.  

இந்தநிலையில் கொரானோ ஊரடங்கு காலத்தில் பல நடிகர்கள், நடிகைகள் சொந்தமாக யு-டியுப் சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில், இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான்கான் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அவருடைய பெயரிலேயே புதிதாக யு-டியுப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் அவரே பாடி, நடித்த பாடல் வீடியோ ஒன்றை மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

 அது தற்போது வரை 96 லட்சம் பார்வைகளைப் பெற்றது. இரு தினங்களுக்கு முன்பு 'தேரே பினா' என்ற மற்றொரு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸும் நடித்துள்ள அந்த வீடியோ இரண்டு நாட்களுக்குள் 1 கோடியே 70 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலையும் சல்மான்கான்தான் பாடியுள்ளார். 25 நாட்களுக்குள் 10 லட்சம் பாலோயர்களை இந்த யு டியூப் சேனல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.