சினிமா செய்திகள்

வீட்டிலேயே நடனம்; நடிகை சாயீஷா வெளியிட்ட வீடியோ + "||" + Video released by actress Saiisha

வீட்டிலேயே நடனம்; நடிகை சாயீஷா வெளியிட்ட வீடியோ

வீட்டிலேயே நடனம்; நடிகை சாயீஷா வெளியிட்ட வீடியோ
நடிகை சாயீஷா வீட்டிலிருந்தபடியே நடனமாடி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தை பலரும் பலவிதமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவரை சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாத நடிகைகள் சமையலில் நிபுணர் ஆகும் அளவிற்கு சமையல் கற்றுக் கொண்டுள்ளார்கள். தாங்கள் குடித்த காபி கப்பைக் கூட கழுவாதவர்கள், வீட்டில் சமைத்த சமையல் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்துவிட்டார்கள். 

சில நடிகைகள் அவர்களின் நடிப்புத் தொழிலுக்கு உதவியான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.  இதற்கும் மேலாக பிரபலங்கள் பலரும் தங்களது தினசரி நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, சமையல் என பிரபலங்கள் பகிரும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

அந்த விதத்தில் , நடிகை சாயீஷா வீட்டிலிருந்தபடியே  நடனமாடி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சாயீஷா என்பது குறிப்பிடத்தக்கது.