மோகன்லால்-மீனாவின் திரிஷ்யம் 2-ம் பாகம்
மோகன்லால்-மீனாவின் திரிஷ்யம் 2-ம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் மோகன்லாலே கதாநாயகனாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. கேரளாவில் ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் தமிழில் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story