சினிமா செய்திகள்

பட அதிபர்-டைரக்டர் ரகுநாதன் மரணம் + "||" + Death of filmmaker-director Raghunathan

பட அதிபர்-டைரக்டர் ரகுநாதன் மரணம்

பட அதிபர்-டைரக்டர் ரகுநாதன் மரணம்
பட அதிபரும், டைரக்டருமான ரகுநாதன் மரணம் அடைந்தார்.
பட அதிபரும், டைரக்டருமான ரகுநாதனுக்கு வயது 79. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘பட்டாம் பூச்சி’ மற்றும் ‘வரப்பிரசாதம்’, ‘இவர்கள் வருங்கால தூண்கள்’ உள்பட பல படங்களை தயாரித்தவர், இவர்.

‘சுபமுகூர்த்தம்’, ‘புத்திசாலி பைத்தியங்கள்’, ‘வலது காலை வைத்து வா’ உள்பட சில படங்களை டைரக்டும் செய்தார். கடைசியாக, ‘மரகதக்காடு’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் திரைக்கு வர தயாராக இருந்தது.

அதற்குள் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரகுநாதன் மரணம் அடைந்து விட்டார். இறுதி சடங்குகள் நெசப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது. அதன்பிறகு அங்குள்ள சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த பட அதிபர் ரகுநாதனுக்கு பத்மாவதி என்ற மனைவியும், பிரகாஷ் என்ற மகன் மற்றும் சித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள்.