சினிமா செய்திகள்

வெப் தொடர் இயக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார் + "||" + KS Ravikumar runs the web series

வெப் தொடர் இயக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார்

வெப் தொடர் இயக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார்
பிரபல நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்.
சென்னை,

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தனர். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சீதா, சுகன்யா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.


பிரபல இயக்குனர்களும் வெப் தொடர்கள் இயக்க தயாராகிறார்கள். ஏற்கனவே கவுதம் மேனன் குயின் வெப் தொடரை இயக்கினார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமாரும் வெப் தொடர் இயக்க தயாராகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நல்ல வாய்ப்பு அமைந்தால் வெப் தொடர் இயக்குவேன். ஏற்கனவே ஒரு வெப் தொடர் இயக்க என்னை கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு ஏற்படாததால் இயக்கவில்லை. இன்னொருவரும் வெப் தொடர் இயக்க பேசினார். அதுவும் சரியாக வரவில்லை அனைத்தும் சரியாக அமையும்போது வெப் தொடர் இயக்குவேன். பணத்துக்காக மட்டும் என்றால் எதையும் செய்யலாம். எனக்கு அது தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.