சீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள்


சீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Jun 2020 10:44 PM GMT (Updated: 2020-06-24T04:14:21+05:30)

சீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் தெரிவித்துள்ள்ளார்.

இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து சீனா தயாரிக்கும் பொருட்களை இனிமேல் வாங்குவதில்லை என்று அனைத்து தரப்பினரும் முடிவு செய்து வருக்கிறார்கள். இந்தநிலையில், இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக நடிகை சனம் ஷெட்டி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ‘டிக் டாக்’ மற்றும் ‘பப்ஜி ஆப்’களை புறக்கணிக்க வேண்டும். சீனா தயாரிக்கும் பொருட்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி விட்டு, இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்திய தயாரிப்புகளையே நாம் வாங்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விசயத்தில், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.” இவ்வாறு நடிகை சனம் ஷெட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.


Next Story