சுந்தர் சி. - வி.இசட்.துரை கூட்டணியில், ‘தலைநகரம்-2’


சுந்தர் சி. - வி.இசட்.துரை கூட்டணியில், ‘தலைநகரம்-2’
x

சுந்தர் சி. கதாநாயகனாக நடித்து, வி.இசட்.துரை இயக்கத்தில் வெளிவந்த ‘இருட்டு’ படம், திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடியது.


சுந்தர் சி. கதாநாயகனாக நடித்து, வி.இசட்.துரை இயக்கத்தில் வெளிவந்த ‘இருட்டு’ படம், திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடியது. இதைத் தொடர்ந்து, ‘இருட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க சுந்தர் சி - வி.இசட்.துரை கூட்டணி விரும்பியது. இந்த நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை காரணமாக, ‘இருட்டு-2’ படத்தை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போடப்பட்டது.

இதையடுத்து, சுந்தர் சி. நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தலைநகரம்-2’ என்ற பெயரில் உருவாக்குவது என்று இருவரும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதில், சுந்தர் சி. கதாநாயகனாக நடிப்பார். வி.இசட்.துரை இயக்குவார். படத்தின் கதா நாயகி இன்னும் முடிவாகவில்லை.

‘தலைநகரம்’ படத்தில், சுந்தர் சி. கதாநாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடி யாக ஜோதிர்மயி நடித்தார். சுராஜ் இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை அமர்க்களமாக அமைந்து இருந்தது. எனவே, ‘தலைநகரம்-2’ படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

டைரக்டர் வி.இசட்.துரை இப்போது அமீர் கதா நாயகனாக நடிக்கும் ‘நாற்காலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ‘தலைநகரம்-2’ படத்தின் படப் பிடிப்பை தொடங்குவார்.

இந்தப் படத்துக்காக சுந்தர் சி. கடந்த மூன்று மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு தாடியுடன் கூடிய தோற்றம் தேவைப்படுவதாக டைரக்டர் வி.இசட்.துரை கூறினார்.

Next Story