சினிமா செய்திகள்

‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார் + "||" + Woman plays the lead role of the Pirates of the Caribbean

‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார்

‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார்
பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படம் நடிகருக்கு பதிலாக நடிகையை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரீபியன் தீவு பகுதிகளில் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை பற்றி கற்பனையாக வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்களில் ஜானி டெப் நடித்துள்ள கேப்டன் ஜாக் கதாபாத்திரம் பிரபலம். டெட்மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம் ஜெல், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் பிரபலமான ஜானிடெப் 2003-ம் ஆண்டு பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்தார்.


தலையில் தொப்பியுடன் கண்களை உருட்டி நக்கலாக பேசி எதிரிகளுடன் வாளோடு மோதும் அவரது கதாபாத்திரத்தை இளைஞர்களும் குழந்தைகளூம் பெரிதும் ரசித்தார்கள். இதன்மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற அவர் அடுத்தடுத்த பாகங்களிலும் நடித்தார். அவருக்கு வயதாவதால் இனிமேல் பைரேட் ஆப் த கரிபியன் படத்தில் நடிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படம் நடிகருக்கு பதிலாக நடிகையை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மார்காட் ராப்பி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வொல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட், சூசைட் ஸ்குவாட், பேர்ட்ஸ் ஆப் பிரே, ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.