சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி + "||" + Famous producer Corona kills

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் போக்கூரி ராமராவ் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் போக்கூரி ராமராவும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இவர் கோபிசந்த் நடித்த ரணம், நேட்டி பாரதம், இன்ஸ்பெக்டர் பிரதாப், அம்மாயிகோசம் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். போக்கூரி ராமராவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலும் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65. ஏற்கனவே பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராஜ்திலக் இந்தி படத்தை தயாரித்த பிரபல இந்தி பட அதிபர் அனில்கபூர் ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.