ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் இயர்ல் கேமரான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் இயர்ல் கேமரான். கருப்பினத்தவரான இவர் பெர்முடாவில் பிறந்து இங்கிலாந்து வந்து படங்களில் நடித்தார்.
1951-ல் பூல் ஆப் லண்டன் படத்தில் கதாநாயகனுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
கருப்பினத்தவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. த ஹார்ட் வித்தின், சிம்பா, டார்ஜான் த மேக்னிபிசியண்ட், த குயின், கியூபா, த இண்டர்பிரிடர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் 4-வது பாகமான ‘தண்டர்பால்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்சன் படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு வயது முதுமையால் படங்களில் நடிக்கவில்லை.
இங்கிலாந்தில் உள்ள வார்விக்சையரில் வசித்து வந்த இயர்ல் கேமரான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 104. இயர்ல் கேமரான் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story