சினிமா செய்திகள்

இணைய தளத்தில் ரிலீசாகும் ஆர்யா, ஷகிலா படங்கள்? + "||" + Release on the web Arya and Shakila Movies

இணைய தளத்தில் ரிலீசாகும் ஆர்யா, ஷகிலா படங்கள்?

இணைய தளத்தில் ரிலீசாகும் ஆர்யா, ஷகிலா படங்கள்?
ஆர்யா, சாயிஷா நடித்துள்ள ‘டெடி’ படத்தையும் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
கொரோனாவால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை இணைய தளத்தில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பென்குயின் படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓடிடி தளத்தில் வெளிவந்தன. அடுத்து ஆர்யா, சாயிஷா நடித்துள்ள ‘டெடி’ படத்தையும் இணைய தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. குழந்தைகளை மையப்படுத்திய படமாக ‘டெடி’ தயாராகி உள்ளது. சதிஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் நடித்துள்ளனர். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இதுபோல் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

ஷகிலா 1990-களில் மலையாள பட உலகில் கொடி கட்டி பறந்தார். மம்முட்டி-மோகன்லால் படங்களையே வசூலில் இவரது படங்கள் பின்னுக்கு தள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.