அசைவ உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்ன நடிகர்-நடிகைகள்


அசைவ உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்ன நடிகர்-நடிகைகள்
x
தினத்தந்தி 12 July 2020 7:19 AM GMT (Updated: 12 July 2020 7:19 AM GMT)

‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் ஒரு காலத்தில், தீவிரமான அசைவப்பிரியர். சிக்கன், மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின், சைவத்துக்கு மாறிவிட்டார்.

காலை உணவாக பப்பாளி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், கீரை சூப், மதிய உணவாக சப்பாத்தி, இரவு உணவாக காய்கறி சூப் மற்றும் பழங்கள் சாப்பிடுகிறார் ரஜினிகாந்த்.

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் அசைவ உணவுப்பிரியராக இருந்தவர். இப்போது அவர் சைவத்துக்கு மாறிவிட்டார். காலை உணவாக பழச்சாறுகள் மற்றும் காய்கறி சூப், பகல் உணவாக பச்சை காய்கறிகள், பயிறு வகைகள், இரவு உணவாக சப்பாத்தி ஆகியவைகளை சாப்பிடுகிறார்.

விஜய், வாரத்தில் 2 நாட்கள் மட்டும் அசைவ உணவை சாப்பிடுகிறார். அவர் முக்கால்வாசி சைவப்பிரியராகி விட்டாராம்.

அஜித் தன் கையினால் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு பரிமாறி, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுபவர். அவர் பிரியாணி சாப்பிடுவதில்லை. பெரும்பாலும் சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்.

நயன்தாரா அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்.

சிக்கன் பிரியாணி என்றால் மூக்கு முட்ட சாப்பிட்டு வந்த திரிஷா, தற்போது அதை குறைத்துக் கொண்டார். பெரும்பாலும் சைவ உணவுகளையே சாப்பிடுகிறார்.

அனுஷ்கா, தீவிரமான அசைவப்பிரியராக இருந்தார். இப்போது அசைவத்துக்கு, ‘குட் பை’ சொல்லிவிட்டு, சைவ உணவுக்கு மாறிவிட்டார்.

Next Story