சினிமா செய்திகள்

வெப் தொடரில் நடிக்கும் சூர்யா? + "||" + Surya acting in web series?

வெப் தொடரில் நடிக்கும் சூர்யா?

வெப் தொடரில் நடிக்கும் சூர்யா?
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் அவற்றில் நடிக்க தொடங்கி உள்ளனர்.
ஜெயலலிதா வாழ்க்கை கதையான குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா. நித்யா மேனன் ஆகியோரும் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

சத்யராஜ், சீதா ஆகியோர் தாமிரா இயக்கும் வெப் தொடரில் நடிக்கின்றனர். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களுக்கு மாறுகிறார்கள்.

இந்த நிலையில் சூர்யாவும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்த வெப் தொடருக்கு ‘நவரசா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் ஒன்பது தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை மணிரத்னம், சித்தார்த், அரவிந்தசாமி, ஜெயேந்திரா உள்ளிட்ட 9 இயக்குனர்கள் டைரக்டு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அடுத்து ஹரி இயக்கும் அருவா, வெற்றிமாறனின் ‘வாடி வாசல்’ ஆகிய படங்களில் சூர்யா நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு குறித்து கருத்து: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது ; கி.வீரமணி, முத்தரசன் வலியுறுத்தல்
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது என்று கி.வீரமணி, முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
2. நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்
நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
3. உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் : நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்
உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.
4. இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்: நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது - நடிகர் சூர்யா அறிக்கை
நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.