பாலியல் மிரட்டல் நடிகை போலீசில் புகார்
பாலியல் மிரட்டல் நடிகை போலீசில் புகார்
மன அழுத்தத்தினால் சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ரியா சக்கரவர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சுஷாந்துக்கு மன அழுத்தம் இருந்தது என்றும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு ரியா சக்கரவர்த்தி காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து வலைத்தளத்தில் ரியா சக்கரவர்த்தி கூறும்போது, “நான் பணத்துக்காக பழகினேன் என்றனர். கொலைகாரி, ஒழுக்கம் கெட்ட பெண் என்றார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்” என்றார்.
இந்த நிலையில் ரியா சக்கரவர்த்தி மும்பை சாந்தா குரூஸ் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் அளித்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கமிஷனர் அபிஷேக் கூறும்போது, “2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்:” என்றார்.

Related Tags :
Next Story