நான் கவிஞனா என்று வினா எழுப்புவதா? வைரமுத்து ஆவேசம்


நான் கவிஞனா என்று வினா எழுப்புவதா? வைரமுத்து ஆவேசம்
x
தினத்தந்தி 22 July 2020 11:15 PM GMT (Updated: 22 July 2020 8:38 PM GMT)

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது சமூக வலைதளத்தில் பலரும் அவரை வாழ்த்தினர்.

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது சமூக வலைதளத்தில் பலரும் அவரை வாழ்த்தினர். அவரது திரையுலக சாதனைகள் பற்றிய தொகுப்புகளும் இணைய தளத்தில் வெளிவந்தன. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்துகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த சர்ச்சை மோதலாகவும் உருவானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து நான் கவிஞனா என்றெல்லாம் வினா எழுப்புவது தேவையில்லாத வேலை உங்கள் வேலையை பாருங்கள் என்றும் ஆவேசப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் வினா எழுப்புவது வீண். நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை. நான் வெறும் மொழியாளன். வேலையை பாருங்கள்; மனித வளத்தை மனவளத்தை மான்புறுத்துங்கள்”

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Next Story