இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த நேரத்தை மீட்க முடியாது: ஏ.ஆர் ரஹ்மான் டுவிட்


இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த நேரத்தை மீட்க முடியாது: ஏ.ஆர் ரஹ்மான் டுவிட்
x
தினத்தந்தி 26 July 2020 4:29 PM IST (Updated: 26 July 2020 4:29 PM IST)
t-max-icont-min-icon

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த நேரத்தை மீட்க முடியாது என்று ஏ.ஆர் ரஹ்மான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியது சினிமா பட உலகில் பெரும் விவாதப்பொருளானது. சமூக வலைத்தளங்களிலும் இது பற்றி நெட்டிசன்கள் பரபரப்பாக விவாதித்தனர்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இழந்த பணத்தை, புகழை மீட்டு விடலாம்.  வீணடித்த நேரத்தை மீட்க முடியாது.  அமைதி ! கடந்து செல்வதே சிறந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன” என்று கூறியுள்ளார். 


Next Story