சினிமா செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ் + "||" + Thanks to the fans who wished me a happy birthday Dhanush

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ் சினிமாவுக்கு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த தனுஷ் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது தனித்துவமான நடிப்பாலும் சிறந்த கதை தேர்வாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் தனுஷ். இந்தநிலையில் நேற்று நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி செல்வதென்றே தெரியவில்லை உங்கள் அன்பால் திக்குமுக்காடிப்போய்விட்டேன். அனைத்து காமன் டிபிக்கள், மாஷ்அப்க்கள், வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுன் டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், கவிழ்ந்தேன் மிக்க நன்றி.

அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான் உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப்படுகிறேன். மேலும் எனக்கு தொலைபேசி வாயிலாகவும், பத்திரிக்கை மூலமாகவும் சமூகவலைதளங்கள் வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் அரசியல் பெருமக்கள், நண்பர்கள் மற்றும் பண்பலை ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.