சினிமா செய்திகள்

நண்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் நடிகை அமலா பால் பதிவிட்ட வீடியோ + "||" + Video posted by actress Amala Paul on Instagram

நண்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் நடிகை அமலா பால் பதிவிட்ட வீடியோ

நண்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் நடிகை அமலா பால் பதிவிட்ட வீடியோ
தமது நண்பர்களுடன், மது அருந்தும் வீடியோவை, நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலருக்கும் அறிமுகமானவர் அமலாபால். அவரின் நடிப்பால் பலரை கவர்ந்தார். ஆர்யா, அதர்வா உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களுடனும் விக்ரம், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தமிழில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லாலுடனும் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக உயர்ந்தார் அமலாபால். அதோ அந்த பறவை போல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை பட காட்சி பரபரப்பானது.  இப்படத்தை தடை செய்யக்கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார்  அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் பிரபல பாடகர் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என சில சர்ச்சைகளை கிளம்பியது. ஆனால் அது உண்மையல்ல போய் என நடிகை அமலா பால் நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் தமது நண்பர்களுடன், மது அருந்தும் வீடியோவை, நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.