சினிமா செய்திகள்

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா + "||" + Samantha who came forward beyond the talented

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்துள்ளேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சென்னை,

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நடிகை சமந்தாவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

“நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன். என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன். எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”  இவ்வாறு சமந்தா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.
2. “நான் பெரிய அழகி இல்லை”; நடிகை சமந்தா
நான் பெரிய அழகி இல்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
3. போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத்
போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரியாவை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
4. ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து; புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.
5. மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார்
மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன் என நடிகர் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.