சினிமா செய்திகள்

சுயசரிதை எழுதிய பிரியங்கா சோப்ரா + "||" + Autobiography written by Priyanka Chopra

சுயசரிதை எழுதிய பிரியங்கா சோப்ரா

சுயசரிதை எழுதிய பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிடுகிறார்.

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வானார். தொடர்ந்து உலக அழகி பட்டமும் வென்றார். விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி முடித்துள்ளார். விரைவில் இதனை புத்தகமாக வெளியிடுகிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது. அதை புத்தகமாக வெளியிட ஆவலாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக சுயசரிதை இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு ஆரம்பித்து 6, 7 மாதங்கள் கடந்து விட்டன. இதன் தாக்கம் உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மைக்கு மாற வேண்டும். நானும் பலருக்கு உதவி வருகிறேன்’ என்றார்.