சினிமா செய்திகள்

நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம் + "||" + Actress Kareena Kapoor is pregnant again

நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்

நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்
நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் 1991-ல் நடிகை அம்ரிதா சிங்கை மணந்து 2004-ல் விவாகரத்து செய்தார். இவர்களின் மகள் சாரா அலிகான் திரைப்படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் 2012-ல் இந்தி நடிகையும், நடிகர் ரந்தீர் கபூரின் மகளுமான கரீனா கபூரை சயீப் அலிகான் காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. கரீனா கபூருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் குடும்பத்தில் இன்னொரு நபரை எதிர்பார்க்கிறோம். இதனை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

கரீனா கபூர் தற்போது அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக அழைத்து வரலாம்: தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் அனுமதி
வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தாராளமாக தமிழகத்துக்கு அழைத்து வரலாம் என்று தொழில் கூட்டமைப்பினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
3. டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை - அரவிந்த கெஜ்ரிவால் தகவல்
டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
4. தனி விமானத்தில் சென்ற படக்குழு: மீண்டும் அவதார் 2 படப்பிடிப்பு
மீண்டும் அவதார் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக தனி விமானத்தில் படக்குழு நியூசிலாந்து சென்றுள்ளது.
5. தென் கொரியாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று
தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உள்ளது.