மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை


மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை
x
தினத்தந்தி 14 Aug 2020 2:10 AM GMT (Updated: 2020-08-14T07:40:58+05:30)

ஆபாச பட நடிகை தனது மூக்கு கண்ணாடியை ஏலத்துக்கு விட்டுள்ளார்.


பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா. இவரது ஆபாச பட வீடியோக்கள் உலக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக ஆபாச பட தளத்தில் வளர்ந்தார். இவருக்கு ஐ.எஸ்.ஐ. எஸ். பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் தற்போது ஆபாச பட தொழிலில் இருந்து விலகி விளையாட்டு துறையில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். 

சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து 200 பேர் பலியானதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் உலகையே உலுக்கியது. மியா கலிபா பெய்ரூட்டில் பிறந்தவர் என்பதால் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தனது மூக்கு கண்ணாடியை ஏலத்துக்கு விட்டுள்ளார். இந்த ஏலம் மூலம் வசூலாகும் தொகையை பாதிக்கப்பட்ட பெய்ரூட் மக்களுக்கு வழங்குகிறார். இதுவரை இந்த மூக்கு கண்ணாடி ரூ.75 லட்சம் வரை ஏலம் போய் உள்ளது. இன்னும் அதிக தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story