சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பட நடிகையின் டுவிட்டரை முடக்கிய மர்ம நபர்கள் + "||" + Someone Hacked GV Prakash film actress' Twitter

ஜி.வி.பிரகாஷ் பட நடிகையின் டுவிட்டரை முடக்கிய மர்ம நபர்கள்

ஜி.வி.பிரகாஷ் பட நடிகையின் டுவிட்டரை முடக்கிய மர்ம நபர்கள்
நடிகை இஷா ரெப்பாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.
நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்து தங்கள் படங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அரசியல் சமூக விஷயங்களில் தங்கள் பார்வை பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதும் உண்டு. இந்த கணக்குகளில் விஷமிகள் ஊடுருவி முடக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. ஜெயம்ரவி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, வித்யுலேகா, அபர்னா முரளி, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரது சமூக வலைத்தள பக்கங்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி தொழில் நுட்ப குழுவினர் உதவியால் அவை மீட்கப்பட்டன.


இந்த நிலையில் தற்போது நடிகை இஷா ரெப்பாவின் டுவிட்டர் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர். இவர் தமிழில் ‘ஒய்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட தகவலை இஷா ரெப்பா வெளியிட்டு உள்ளார்.