சினிமா செய்திகள்

லாபம் படத்தில் புரட்சியாளராக விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi as the revolutionary in the film Laabam

லாபம் படத்தில் புரட்சியாளராக விஜய் சேதுபதி

லாபம் படத்தில் புரட்சியாளராக விஜய் சேதுபதி
லாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக லாபம் உள்ளது. இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் 2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடமை வந்தது. லாபம் படத்தில் சுருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோரும் உள்ளனர்.


கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் அதை முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

லாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுருதிஹாசன் மேடைகளில் புரட்சி பாடல்கள் பாடும் பெண்ணாக வருகிறார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுடுவது போன்ற படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது என்று பேசப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை (சனிக்கிழமை) மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்தான் படத்தின் கதையா? என்பது அப்போது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கில் மார்க்கெட் பிடித்த விஜய் சேதுபதி
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம்.
2. சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!
தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
3. குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
4. வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா?
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன
5. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி நடித்த மிரட்டலான காட்சிகள்
’மாஸ்டர்’ படத்தில் விஜய்-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மிரட்டலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.