சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா வாழ்க்கை படமாகிறது


சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா வாழ்க்கை படமாகிறது
x
தினத்தந்தி 26 Aug 2020 11:30 PM GMT (Updated: 2020-08-26T23:58:29+05:30)

தனது வாழ்க்கையை படமாக்க போவதாக இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவித்து உள்ளார்.

சர்ச்சை கதைகளையும், உண்மை சம்பவங்களையும் படமாக எடுத்து பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் இயக்கி தமிழ், கன்னட மொழிகளில் வெளியிட்டார். சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கி வெளியிட்ட ரத்தசரித்திரம் படமும் உண்மை சம்பவம்தான்.

இந்த நிலையில் தனது வாழ்க்கையை படமாக்க போவதாகவும், படத்துக்கு ராமு என்ற பெயர் வைத்து இருப்பதாகவும் ராம்கோபால் வர்மா அறிவித்து உள்ளார். 3 பாகங்களாக இந்த படம் உருவாகிறது. இதற்கான கதை, திரைக்கதையை ராம்கோபால் வர்மாவே எழுதுகிறார். புதிய இயக்குனர் தொரசாய் தேஜா இயக்குகிறார். 3 பாகங்களிலும் தனது வாழ்க்கையில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் இருக்கும் என்றும், எனது மேற்பார்வையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்து உள்ளார்.

Next Story