கைலாசாவுக்கு செல்ல விரும்பும் மீராமிதுன்


கைலாசாவுக்கு செல்ல விரும்பும் மீராமிதுன்
x
தினத்தந்தி 27 Aug 2020 12:18 AM GMT (Updated: 2020-08-27T05:48:01+05:30)

நடிகை மீராமிதுனும் கைலாசாவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் சமீபத்தில் கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாட்டுக்கு தன்னை அதிபராகவும் பிரகடனப்படுத்தி உள்ளார். கைலாசாவுக்கு தனியாக ரிசர்வ் வங்கியை ஆரம்பித்து இருப்பதாகவும், அந்த நாட்டிற்கென்று பிரத்யேகமாக தங்கத்தில் நாணயங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நித்யானந்தா மீது ஏற்கனவே போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கைலாசாவில் குடியேற விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து பலர் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். கைலாசாவில் ஓட்டல் ஆரம்பிக்க அனுமதிக்கும்படி நித்யானந்தாவுக்கு கோரிக்கை விடுத்த மதுரை ஓட்டல் அதிபர் மீது மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகை மீராமிதுனும் கைலாசாவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நித்யானந்தாவை ஒவ்வொருவரும் கேலி செய்கின்றனர். அவரை பற்றி எதிர்மறையான தகவலை வெளியிடுகிறார்கள். ஆனால் அவர் தற்போது கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் வலிமையாக வளர்ந்து வருகிறார். நானும் விரைவில் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story