விராட் கோலி மனைவி நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பம்


விராட் கோலி மனைவி நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பம்
x
தினத்தந்தி 28 Aug 2020 12:15 AM GMT (Updated: 2020-08-28T02:16:23+05:30)

அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக இருப்பதாக விராட்கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ல் காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மா ரப்னே பனாதி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். பாத்மாஸ் கம்பெனி, பாட்டியாலா ஹவுஸ், பி.கே., பாம்பே வெல்வெட், சுல்தான், சஞ்சு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. அதனை அவர் மறுத்தார். இந்த நிலையில் அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக இருப்பதாக விராட்கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அனுஷ்கா சர்மாவும் தான் தாயாக போகிறேன் என்றும் ஜனவரி மாதம் பிரசவம் இருக்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அனுஷ்கா சர்மா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லை. அவரது நடிப்பில் கடைசியாக ஜீரோ படம் வந்தது. தற்போது வெப் தொடர்கள் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார்.

Next Story