சினிமா செய்திகள்

டாப்சியின் இந்தி படம் தமிழில் ‘ரீமேக்’ + "||" + Topsy's Hindi film 'Remake' in Tamil

டாப்சியின் இந்தி படம் தமிழில் ‘ரீமேக்’

டாப்சியின் இந்தி படம் தமிழில் ‘ரீமேக்’
டாப்சி தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதனை நிகழ்த்திய வீராங்கனையின் உண்மை சம்பவம் படமாக தயாராகிறது. இந்த படத்தின் கதையை ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் நந்தா பெரியசாமி எழுதி உள்ளார். இந்த கதை பற்றி கேள்விப்பட்டு டாப்சியே நந்தா பெரிய சாமியை மும்பைக்கு அழைத்து கதைக்கான முன்பணத்தையும் கொடுத்து விட்டார். படத்தை ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். இந்த படத்துக்காக டாப்சி தனது தோற்றத்தையே மாற்றி உள்ளார். ராஷ்மி ராக்கெட் படம் தமிழ், தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. இதற்கான உரிமையை மாஸ்டர் பீஸ் பட நிறுவனம் பலத்த போட்டிகள் இடையே வாங்கி இருக்கிறது.


தமிழ் ரீமேக்கிலும் டாப்சியையே நடிக்க வைக்க பேசி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.