சினிமா செய்திகள்

கன்னட பட ரீமேக்கில் ஷாம், பிரசன்னா? + "||" + Sham, Prasanna in Kannada movie remake?

கன்னட பட ரீமேக்கில் ஷாம், பிரசன்னா?

கன்னட பட ரீமேக்கில் ஷாம், பிரசன்னா?
கன்னட பட ரீமேக்கில் ஷாம், பிரசன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிறமொழிகளில் வெற்றி பெற்ற படங் களை தமிழில் ரீமேக் செய்யும் மோகம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மலையாளத்தில் வெற்றி பெற்ற கதை பறையும்போல் படம் ரஜினிகாந்த் நடிக்க குசேலன் என்ற பெயரிலும், திரிஷ்யம் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரிலும், ஹவ் ஓல்டு ஆர் யூ ஜோதிகா நடிக்க 36 வயதினிலே என்ற பெயரிலும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. 3 இடியட்ஸ் இந்தி படம் விஜய் நடிக்க நண்பன் என்ற பெயரில் வந்தது. இதுபோல் மேலும் சில படங்களும் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. அடுத்து அய்யப்பனும் கோஷியும் மலையாள படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் சிம்பு, பார்த்திபன் ஆகியோர் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இந்தியில் டாப்சி நடித்து வரும் ராஷ்மி ராக்கெட் படத்தையும் தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.


இந்த நிலையில் கன்னடத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘மாயாபஜார் 2016’ படத்தையும் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை சுந்தர்.சி வாங்கி உள்ளார். இதில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்து அவர்களுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பத்ரி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.