சினிமா செய்திகள்

ராமாயண காவியத்தில் சீதை வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம் + "||" + New film focusing on the life of Sita in the Ramayana epic

ராமாயண காவியத்தில் சீதை வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்

ராமாயண காவியத்தில் சீதை வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்
சீதை வாழ்க்கையை மட்டும் மையப்படுத்தி புதிய ராமாயணம் படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயண காவியம் அருண்கோவில், தீபிகா நடித்து தூர்தர்ஷனில் ஏற்கனவே தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது ஆதி புருஷ் என்ற பெயரில் ராமாயண கதையை திரைப்படமாக எடுக்கின்றனர். 3 டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணன் வேடத்துக்கு சயீப் அலிகான், ராணா ஆகியோரை பரிசீலிக்கப்படுகின்றனர். சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோனே உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.250 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் ராமனுக்கு பதிலாக சீதை வாழ்க்கையை மட்டும் மையப்படுத்தி புதிய ராமாயணம் படம் தயாராக உள்ளதாகவும் இதற்கான பணிகளில் பிரபல இந்தி பட நிறுவனம் ஈடுபட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். சீதையின் இளமை காலத்தில் இருந்து ராமரை மணமுடித்ததுவரை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக்குகின்றனர். நேபாளத்தில் சீதை பிறந்ததாக கருதப்படும் இடத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.