சினிமா செய்திகள்

எனது படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவது ஏன்? - நிவேதா தாமஸ் விளக்கம் + "||" + Why publish my movie on OTT? - Nivetha Thomas Description

எனது படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவது ஏன்? - நிவேதா தாமஸ் விளக்கம்

எனது படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவது ஏன்? - நிவேதா தாமஸ் விளக்கம்
தனது படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவது ஏன்? என்பது குறித்து நிவேதா தாமஸ் விளக்கமளித்துள்ளார்.
ரஜினியுடன் தர்பார், கமலுடன் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் வந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் நானியுடன் நடித்துள்ள வி படம் நாளை மறுநாள் (5ந்தேதி) ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-


“வி படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யத்தான் எடுத்தனர். கொரோனா காரணமாக ஓ.டி.டியில் வெளியிடுகிறார்கள். நாம் எல்லோரும் பக்கத்தில் இருக்கிற கடைகளுக்கு செல்லவே யோசிக்கிறோம். தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பது உறுதியாகவில்லை. மத்திய அரசு அறிவித்த தளர்வில் கூட தியேட்டர் இல்லை. ஒருவேளை இப்போது தியேட்டர்கள் திறந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. இந்த மாதிரி நிலையில் ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதுதான் சரியான முடிவு.

இந்த படத்தை ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருந்தாலும் இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. கொரோனாவால் குடும்பத்தோடு நிறைய நாட்கள் செலவிட்டு இருக்கிறேன். ஊரடங்கில் நிறைய கதைகள் கேட்டேன். நல்ல கதாபாத்திரம் வந்தால் வெப் தொடரில் நடிப்பேன். முதல் இடம் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகை என்று பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதைவிட இந்த பெண் நன்றாக நடித்து இருக்கிறாள் என்று பேசுவதில்தான் மகிழ்ச்சி. வில்லி வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது.”

இவ்வாறு கூறினார்.