சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய நடிகை வித்யாபாலன் + "||" + Actress Vidya Balan caught in controversy

சர்ச்சையில் சிக்கிய நடிகை வித்யாபாலன்

சர்ச்சையில் சிக்கிய நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது. அவரை நடிகை ரியா சக்கரவர்த்தி காதலித்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை வித்யாபாலன் ரியாவுக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.


அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ரியாவை வில்லியாக சித்தரிப்பதை பார்த்து எனது நெஞ்சே வெடிக்கிறது. நீதி துறை மீதும் விசாரணை அதிகாரிகள் மீதும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் உன்மையை கண்டு பிடிப்பார்கள். அதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் கோபம் வித்யாபாலன் பக்கம் திரும்பி உள்ளது.

சுஷாந்த் சிங் மரண வழக்கை திசை திருப்ப இந்தி திரையுலக மாபியாக்கள் வித்யாபாலன் போன்ற நடிகைகளை களம் இறக்கி உள்ளனர் என்றும் வித்யாபாலன் படங்களையும் இனிமேல் புறக்கணிப்போம் என்றும் பதிவிட்டு உள்ளனர். சுஷாந்த் சிங் தற்கொலை செய்தபோதும், அவரது குடும்பத்தினரை ரியா கேவலமாக பேசும்போதும் மவுனமாக இருந்த வித்யாபாலன் இப்போது ரியாவுக்கு ஆதரவாக பேசி மரியாதையை கெடுத்து கொண்டார். இந்தி பட உலகில் புழங்கும் போதை பொருள் நடமாட்டை திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றெல்லாம் திட்டி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.