சினிமா செய்திகள்

2 ஒட்டகங்கள்-5 குதிரைகள் வளர்த்த ரூபா மஞ்சரி + "||" + Rupa Manjari who raised 5 horses, 2camels

2 ஒட்டகங்கள்-5 குதிரைகள் வளர்த்த ரூபா மஞ்சரி

2 ஒட்டகங்கள்-5 குதிரைகள் வளர்த்த ரூபா மஞ்சரி
நடிகை ரூபா மஞ்சரி ஒட்டகங்கள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளை வளர்த்ததாக கூறியுள்ளார்.
‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், ரூபா மஞ்சரி. தொடர்ந்து, ‘நான்,’ ‘யாமிருக்க பயமே,’ ‘சிவப்பு’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற பிறகும் அதிகமாக பட வாய்ப்புகள் வரவில்லை. இதுபற்றி அவர் கூறியதாவது:


“நான், பெங்களூருவில் வளர்ந்த பெண் என்றாலும், எங்கள் பூர்வீகம் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர்தான். இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது, எங்கள் அப்பாவின் தாத்தா திவானாக இருந்தவர். ஓசூர் பக்கத்தில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக பண்ணை இருக்கிறது. அதில் மாடுகள், கோழிகளுடன் 2 ஒட்டகங்கள் மற்றும் 5 குதிரைகளை வளர்த்தோம்.

இப்போது அந்த பண்ணையில் ஒரு குதிரையும், ஒரு ஒட்டகமும் மட்டும் இருக்கிறது. எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும். பண்ணையில் நிறைய பசு மாடுகள் உள்ளன. கோழி மற்றும் நாய்களையும் வளர்த்து வருகிறோம்.

சினிமாவில் நானாக போய் வாய்ப்பு கேட்பதில்லை. வருகிற பட வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தமிழில் 4 படங்கள் நடித்து விட்டேன். மலையாளத்தில் 2 படங்களில் நடித்து இருக்கிறேன். ‘யாமிருக்க பயமே’ என்ற பேய் படத்தில் நடித்ததில் இருந்து, அதேபோன்ற பேய் பட வாய்ப்புகள் நிறைய வந்தன. நடிக்க மறுத்து விட்டேன். வியாபார ரீதியிலான படங்கள் மற்றும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்.”