சினிமா செய்திகள்

கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - நடிகை சமந்தா + "||" + Actress Samantha turns candid

கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - நடிகை சமந்தா

கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - நடிகை சமந்தா
கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
மும்பை,

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. ஆனால் இதற்கு முன்பு நடித்த கதை சாயலில் மீண்டும் நடிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.


அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். கொரோனாவில் எல்லோரும் கஷ்டத் தில் இருக்கிறோம். இந்த கஷ்டகாலம் விரைவில் முடிவுக்கு வந்து அனை வரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கில் குடும்பத்தோடு அதிக நேரம் ஒதுக்க முடிந்தது. கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இனிமேல் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களுக்கு மட்டும் கஷ்டப்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

வாழ்க்கை மேன்மையாக இருக்க உணவு கட்டுப்பாடு, யோகா, தியானங்கள் பக்கம் திரும்ப வேண்டும். தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்த நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சமந்தா கூறினார்.