சினிமா செய்திகள்

முதல்-அமைச்சர் வேட்பாளர்: ரஜினிகாந்துக்கு லாரன்ஸ் கோரிக்கை + "||" + CM Candidate: Lawrence's Request to Rajinikanth

முதல்-அமைச்சர் வேட்பாளர்: ரஜினிகாந்துக்கு லாரன்ஸ் கோரிக்கை

முதல்-அமைச்சர் வேட்பாளர்:  ரஜினிகாந்துக்கு லாரன்ஸ் கோரிக்கை
ரஜினி முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நடிகர் லாரன்ஸ் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“கடந்த வாரம் நான் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட பிறகு பலரும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரையோ ஆதரிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஜினி முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். ரஜினி முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். ரஜினிகாந்த் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது. நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ”  இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கோவையில் பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.