சினிமா செய்திகள்

பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம் + "||" + Badminton player dies of heart attack

பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்

பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்
பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்
பிரபல மலையாள டி.வி நடிகர் சபரிநாத். இவர் மின்னுக்கேட்டு, அமலா, சுவாமி அய்யப்பன், ஸ்ரீபதம், பாக்யலட்சுமி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது பாடாத பைங்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் கொரோனா ஊரடங்கில் சபரிநாத் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சபரிநாத் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. இது மலையாள டி.வி. நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மரணம் அடைந்த சபரிநாத்துக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.