சினிமா செய்திகள்

‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ் + "||" + Prakashraj in the lead role in ‘KGF-2’

‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ்

‘கே.ஜி.எப்.-2’ படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ்
கே.ஜி.எப்.-2 படத்தில் முக்கிய வேடத்தில், பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்

கன்னட பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர், யஷ். இவர் நடித்து 2018 டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்.’ என்ற கன்னட படம், கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடி, பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

அந்த படங்களும் வெற்றிகரமாக ஓடின. படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. இரண்டாம் பாகத்தில், சஞ்சய்தத் நடிப்பார் என்று பேசப்பட்டது. உடல்நலக்குறைவாக இருப்பதால், அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், ‘கே.ஜி.எப்.’ இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரசாந்த் நீல் டைரக்டு செய்கிறார்.