சினிமா செய்திகள்

‘காமெடி டிராமா’ படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ் + "||" + Mega Akash opposite Ashok Selvan in 'Comedy Drama'

‘காமெடி டிராமா’ படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ்

‘காமெடி டிராமா’ படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ்
காமெடி டிராமா படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ்.

தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகன் அசோக் செல்வன், ஒரு ‘காமெடி டிராமா’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இந்த படத்தை ஜே.செல்வகுமார் தயாரிக்கிறார். சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஸ்வாதினி டைரக்டு செய்கிறார்.

படத்தை பற்றி இவர் கூறும்போது, “இந்த படத்தின் கதைப்படி கதாநாயகி அழகும், இளமையும் உள்ளவராக குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்துக்கு மேகா ஆகாஷ் கச்சிதமாக பொருந்துவார். அசோக் செல்வனுக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார். அவருடன் இணைந்து பணிபுரியும் மிக சிறந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

மேகா ஆகாஷ் கூறுகையில், “மிக தரமான, நேர்த்தியான திரைக்கதையை கொண்ட படத்தில், அதுவும் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிப்பது, வரம். கதையை கேட்டபோது, கதாபாத்திரத்தின் ஆத்மாவுக்குள் கரைந்து போனேன்” என்றார்.