உடன்படாத விஷயங்களால் பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் - சுருதிஹாசன்


உடன்படாத விஷயங்களால் பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் - சுருதிஹாசன்
x
தினத்தந்தி 27 Sep 2020 10:45 PM GMT (Updated: 2020-09-28T01:08:27+05:30)

இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் மற்றும் போதை பொருள் சர்ச்சைகள் வலுத்து வருகின்றன.

இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் மற்றும் போதை பொருள் சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. போதை மருந்து விருந்துகளில் கலந்து கொண்டால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றும் சில நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனது தந்தையிடம் ஒருவர், மகள்களை சினிமாவில் நடிக்க வைப்பதில் வருத்தம் இல்லையா என்று கேட்டார். இந்த கேள்விக்குள் பல விஷயங்கள் உள்ளன. உடனே எனது தந்தை உங்கள் மகளுக்கு நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்து உங்களுக்கு தெரியாத வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறீர்கள். எனது மகளை நான் வளர்ந்த வீட்டுக்கு அனுப்பி இருக்கிறேன். இது என் வீடு. வலிமையாக இருக்கவும் கற்றுக்கொடுத்து இருக்கிறேன் என்றார். இதுதான் உண்மை. என்னை சுற்றி இருப்பவர்கள் ஆதரவாக உள்ளனர். பணியாற்றும் தொழிலை பழிக்கக்கூடாது. துறையில் நல்லதும், கெட்டதும் இருக்கும். எனக்கு உடன்படாத விஷயங்களை ஒப்புக்கொள்வது இல்லை என்பதை பெருமையாக சொல்வேன். பெரிய இயக்குனராக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி. இதற்காக அதிக விலை கொடுத்துள்ளேன். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பரவாயில்லை.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.

Next Story