சினிமா செய்திகள்

காதலரை மணக்கும் நடிகை ரோஷ்னா + "||" + Actress Roshna marrying boyfriend

காதலரை மணக்கும் நடிகை ரோஷ்னா

காதலரை மணக்கும் நடிகை ரோஷ்னா
மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படம் பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் பிரபலமானது.
மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படம் பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் பிரபலமானது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியிட்டனர். படத்தில் ரோஷ்னா அன்ராயும் ஒரு கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் ஆசிரியை கதாபாத்திரத்தில் வந்தார். தொடர்ந்து பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரோஷ்னா அன்ராயும் அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லசும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனாலும் அதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்தநிலையில் கிச்சு டெல்லஸும் ரோஷ்னா அன் ராயும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் . இதனை ரோஷ்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் திருமணத்தை முறைப்படி அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலோடு என்னை நேசித்த கிச்சுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். அத்துடன் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைபடத்தையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.