சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி


சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி
x
தினத்தந்தி 30 Sep 2020 12:36 AM GMT (Updated: 2020-09-30T06:06:12+05:30)

நடிகர் சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது.

தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். இவர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க தனது ஓட்டலை வழங்கியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தும், வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானம் அனுப்பி அழைத்துவந்தும் பெரிய அளவில் உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இந்தநிலையில் சோனுசூட் பெயரில் ஆன்லைனில் மோசடி நடந்துள்ளது. மர்ம நபர்கள் சோனுசூட் பெயரில் உங்களுக்கு உதவ வேண்டுமானால் ரூ.1,700 செலுத்த வேண்டும் என்று ஆன்லைனில் தகவல் அனுப்பி அந்த தொகையை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சோனுசூட் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சோனுசூட் கூறும்போது, “எனது பெயரில் மோசடி நடப்பதாக நிறைய புகார்கள் வந்துள்ளன. மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர தயாராக இருக்கிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Next Story